CLICK THE IMAGE TO READ IN ENGLISH
அத்யாயம் – 4
பாதம் – 22
த்யக்த்வா கர்ம பலாஸங்கம் நித்ய த்ருப்தோ நிராஷ்ரய
கர்மண் யபிப்வ்ருத்தோ அபி நைவ கிஞ்சித் கரோதிஸ
த்யக்த்வா – துறந்து
கர்மபலஆஸங்கம்- பலன்களின் மீதான பற்றை
நித்ய –எப்போதும்
த்ருப்த – திருப்தியுற்று
நிராஷ்ரய – எதையும் சாராமல்
கர்மணி – செயலில்
அபிப்ரவ்ருத்த – முழுமையாக ஈடுபட்டு
அபி – இருந்தும்
ந – இல்லை
ஏவ – நிச்சியமாக
கிஞ்சித் – ஏதும்
கரோதி – செய்வது
ஸ – அவன்
மொழிபெயர்ப்பு
தனது செயல்களின் பலன்களின் மீதான எல்லாப் பற்றுதலையும் துறந்து, எப்போதும் திருப்தியுற்று சுதந்திரமாக விளங்கும் அவன், எல்லாவிதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் எந்தச்[பலன் நோக்குச் ] செயலையும் செய்வதில்லை.
பொருளுரை
ஒருவன் எல்லாவற்றையும் கிருஷ்ணருக்காக கிருஷ்ண உணர்வில் செய்யும்போது மட்டுமே செயல்கலளின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவது சாத்தியமாகும். கிருஷ்ண பக்தன் பரம புருஷ பகவானிடமுள்ள தூய அன்பில் செயல்படுவதால், செயலின் பலன்களில் அவனுக்கு எவ்வித கவர்ச்சியும் இல்லை. அனைத்தையும் கிருஷ்ணரிடம் ஒப்படைத்துவிட்டால், அவன் தனது சுய பராமரிப்பையும் பொருட்படுத்துவதில்லை.மேலும், சொத்துக்களைச் சேர்ப்பதற்கோ ஏற்கனவே தன்னிடம் உள்ள சொத்துக்களைப் பாதுகாப்பதற்கோ அவன் கவலைப்படுவதில்லை. தன் கடமையை தன்னால் இயன்றவரை திறமையாகச் செய்துவிட்டு அனைத்தையும் கிருஷ்ணரிடம் விட்டுவிடுகின்றாண். இத்தகு பற்றற்ற மனிதன் நல்ல, தீய விளைவுகளிலிருந்து எப்போதும் விடுபடுட்டுள்ளான். எனவே அவன் எதையும் செய்யாதது போலவேயகிறது. இதுவே அகர்மா அல்லது பலன் விளைவுகளற்ற செயல் என்பதன் அறிகுறியாகும். எனவே கிருஷ்ண உணர்வின் செயலைத் தவிர மற்ற செயல்கள் அனைத்தும், செய்பவனை பந்தப்படுத்துவதால் அவை விகர்மா எனப்படும்
No comments:
Post a Comment