Showing posts with label அசைவ உணவு தேவையா?. Show all posts
Showing posts with label அசைவ உணவு தேவையா?. Show all posts

Saturday, November 5, 2011

சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

veg_saranjkpசைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:
நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.
மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

உடல் எடை:
இறைச்சி உணவை தவிர்ப்பது கொழுப்பு உடலில் சேருவதை குறைக்கும் ஒரு எளிய வழிமுறை. அதற்கு பதிலாக முழு தானிய உணவு,மொச்சை, காய்கறிகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் போன்றவற்றை உண்பது உடம்பிலுள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் குறைக்கிறது.
பற்களுக்கு எளிது:
நமது கடைவாய் பற்கள் இறைச்சி துண்டுகளை கடித்து இழுப்பதை காட்டிலும் தானிய உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை மென்று அரைக்கத்தான் அதிக தோதாக அமைந்துள்ளன. உமிழ் நீருடன்தான் ஜீரண வேலை முதலில் தொடங்குகிறது.இந்த உமிழ் நீர் தாவர வகை கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே ஜீரணிக்க செய்யும் ஆற்றலுடையது.
நோய் தடுப்பு:
மேற்கூறிய சைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், புற்று நோய், சிறுநீரக கோளாறுகள்,ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இவையெல்லாமே சைவ உணவுகளில் மட்டுமே சாத்தியம்.அசைவ உணவு பிரியர்கள் இதனை இழக்கிறார்கள்.

Thursday, February 10, 2011

2. அசைவ உணவு நோயற்றதா?

2.1. மிருகங்களின் உடல்களிலும் நோய்கள்

கொல்லப்படும் மிருகங்களின் உடலிலும் மனிதனின் உடலைப் போலவே எண்ணற்ற நோய்களும், நோய்க்கிருமிகளும் உள்ளன என்பதையும், உண்பவரின் உடலை அவை எளிதில் அடைகின்றன என்பதையும், அசைவ உணவு உண்பவர்கள் மறக்கக் கூடாது.

உதாரணமாக 1972 ல் ஏறக்குறைய கண் புற்று நோய் உடைய ஒரு லட்சம் மாடுகளும் , கல்லீரலில் சீல் பிடித்த கட்டியுடைய 35 லட்சத்து 96 ஆயிரத்து 302 மாடுகளும், கப வாதம் போன்ற நோய் உடைய லட்சக்கணக்கான கோழிகளும் அமெரிக்க அரசங்கத்தால் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டன.

2.2. இறந்த உடல் விரைவில் அழுகும்

images 2 copyகொல்லப்பட்ட மிருகங்களின் உடல் விரைவில் அழுக ஆரம்பித்துவிடும் என்பதையும், உண்பதற்க்கு முன் பாக்டீரியாக்கள் பெருகி, அழுகிய நிலையை அந்த உடல் அடையும் என்பதையும், அசைவ உணவு உண்பவர்கள் மறக்கக் கூடாது.

2.3. மரண பய விஷம் இறந்த உடலில் உண்டு

கொல்லப்படும் மிருகங்கள், மரண பயத்தினால் சுரக்கக் கூடிய அட்ரீனலின் ரத்தத்துடன் கலந்து, அவற்றின் உடல் விஷத் தன்மையை அடைகிறது. உண்பவரையும் அந்த விஷம் அடைகிறது.

2.4. மிருக உடலைப் பாதுகாக்கும் மருந்து மனிதனுக்கு கேடு

மிருகங்imagesகளை நோயிலிருந்து காப்பாற்றவும், அவைகளின் எடையைக் கூட்டுவதற்காகவும், வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காகவும் பெனிசிலின் மற்றும் 2700 விதமான மருந்துகளை கால்நாடை வளர்ப்போர் தொடர்ந்து அம்மிருகங்களுக்கு கொடுக்கின்றனர். அம்மிருகங்கள் இறந்த பின்னும் அவற்றின் உடலில் '” டைதில்ஸ்டில் பெஸ்ட்ரேல்  டிஇஎஸ் ஆர்ச்செனிக்,  சோடியம் நைட்ரேட் போன்ற மனி்த உடலுக்கு பெரிதும் கெடுதி விளைவிக்கக் கூடிய  கொடிய விஷங்கள் உள்ளன. இதனால், இத்தகைய அசைவ உணவை உண்பவர்கள் ஏராளமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.

2.5 அசைவம் உண்ணும் மனிதனின் உடலும், குடலும் நோய்களின் இருப்பிடம்.

மனிதனின் உடலமைப்பு அசைவ உணவை உண்பதற்கும், ஜீரணிப்பதற்க்கும், வெளியேற்ருவதற்க்கும் பொருத்தமில்லாமல் அமைந்திருப்பதால் ஏராளமான நோய்கள், அசைவ உண்பவர்களுக்கு உண்டாகிறது. மனிதனுடைய குடல் அசைவ உணவை சரியாக ஜீரணிக்க முடியாததாலும் விரைவில் அழுகக் கூடிய அசைவ உணவு மனிதனின் நீண்ட குடலில், அதிக நேரம் தங்குவதாலும் குடல் புற்று நோய் உண்டாகிறது. இறந்த மிருகங்களின் உடலில் உள்ள அளவற்ற கொழுப்பு, மனிதனின் இரத்தத் தமனிகளின் உட்சுவர்களில் படிந்து அவற்றை பெருக்கச் செய்கிறது. அதனால், இருதயத் தாக்கு, இரத்த உறைவு போன்ற பயங்கரமான நோய்கள் ஏற்படுகின்றன. அசைவ உணவை ஜீரணிப்பதில் அதிகமாகப் பாடுபடுவதால் உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் விரைவில் பாதிக்கப்படுகின்லறது.

அடு்த்து பதிவு (3. அசைவ உணவு சுவையானதா )

இஸ்கான்.

ஹரே க்ருஷ்ணா

Friday, January 28, 2011

அசைவ உணவு தேவையா? உடலுக்கு ஏற்றதா ?

1.அசைவ உணவு உடலுக்கு ஏற்றதா ?

மனிதனின் உடலமைப்பை, அசைவ உணவு உண்ணும் புலி, சிங்கம், பூனை, நாய் போன்ற விலங்குகளின் உடல் அமைப்போடும், தாவர உணவு உண்ணும் பசு, யானை, ஆடு, மாடு போன்ற விலங்குகளின் உடலமைப்போடும் ஒப்பிட்டுப் பார்க்கையில்  ஆச்சரியப்படும் வகையில் மனிதனின் உடலமைப்பானது தாவர உணவு உண்ணும் விலங்குகளின் உடலமைப்போடு மட்டுமே ஒத்துப் போகிறது.

1.1 பொருந்தாத பார்வை, நகங்கள், முன் பற்கள்

eurasian_eagle_owl

  அசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு இரையைப் பிடிக்க வசதியாக இயற்கையாகவே இருளிலும் பரர்க்கும் சக்தியும், இரையைக் கிழித்துண்ண வசதியாக கைகளில் கூறிய நகங்களும், வாயில் கோரைப்பற்களும் உள்ளன. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இத்தகைய உடலமைப்பு இல்லை. அதிலும், மனிதன் மட்டும் செயற்கையாக அரிவாள் , கத்தியுடன் விலங்குகளைக் கொல்கிறான்.

1.2 பொருந்தாத கமடைவாய்ப் பற்கள்

Untitled-2 copyஅசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு தட்டையான, கடைவாய் பற்கள் இல்லை. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குக்களுக்கும், மனிதர்களுக்கும் தாவார உணவை அரைத்து உண்ண foxவசதியாக தட்டையான கடைவாய்ப் பற்கள் உண்டு.

1.3 பொருந்தாத உமிழ்நீர்

அசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு வாயில் சுரக்கும் உமிழ்நீர், ஜீரணிக்கக் கடினமான மாமிசத்தை மென்மைப்படுத்த, இயற்கையாகவே அமில சக்தி அதிகம் உள்ளதாய் உள்ளது. ஆனால் தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீர் கார சக்தி அதிகம் உள்ளதாகவும், நிறைய உமிழ்நீர் சுரந்து ஜீரணத்தை அதிகப்படுத்தும்வண்ணம் உமிழ்நீர் சுரப்பிகள் பெரியதாகவும், டாயலின் என்ற என்சைம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. அதிலும் மனி்தன் மட்டும் செயற்கையாக பிரஷர் குக்கரில் மாமிசத்தை அதிக நேரம் வேக வைத்து மென்னைப்படுத்துகின்றான்

1.4 பொருந்தாத நீர் அருந்தும் பழக்கம்

அசைவ உணவு உண்ணும் விலங்குகள் தங்கDogளுடைய நீண்ட நாக்குகளை நீட்டி நக்கிக் குடிக்கின்றன. ஆனால் தாவார உணவை உண்ணும் விலங்குகளும், மனிதர்களும் உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன.

1.5 பொருந்தாத சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அமைப்பு

அசைவ உணவு உண்ணும் விலங்குகளின் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இரு கழிவு நீக்கும் உறுப்புக்களும் பெரியதாக இருப்பதால் மாமிசத்தினால் ஏற்படும் அதிக கழிவுகளை உடனடியாக வெளியேற்றுகிறது. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இரண்டும் சிறியதாக இருப்பதால் அதிகமான அளவில் உருவாகும் அசைவக்கழிவுகளை வெளியேற்ற முடிவதில்லை. மாறாக, இவை குறைந்த அளவில் உருவாகும் தாவர உணவினால் வரும் கழிவுகளை வெளியேற்றும்வண்ணம் மட்டுமே அமைந்துள்ளன. மாமிச உணவு உண்ணும் மனிதனுக்கு இயற்கை உதவாததால் செயற்கையான மருந்து, மாத்திரைகள் மூலம் இதற்கு வழி காண முயற்சிக்கிறான்.

1.6 பொருந்தாத குடலமைப்பு

அசைவ உணவு உண்ணும் விலங்குகளின்

அசைவ உணவு உண்ணும் விலங்குகளி்ன் குடல் பகுதி உடல் நீளத்தைப் போல் மூன்று மடங்கு மட்டுமே நீளமானதாக இருப்பதால், விரைவில் கெடக் கூடிய அசைவ உணவு விரைவில் வெளியேற்றப்படுகிறது.ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் குடல் பகுதி உடல் நீளத்தைப் போல் பத்து முதல் பனிரெண்டு மடங்கு வரை நீளமானதாக இருப்பதால் விரைவில் கெடாத தாவர உணவுகள் நீண்ட நேரம் தங்கக் கூடிய வகையில் குடலமைப்பு உள்ளது. அதே சமயம் இந்த நீண்ட குடலமைப்பானது, விரைவில் கெடக் கூடிய அசைவ உணவை, விரைவில் வெளியேற்றாமல் நீண்ட நேரம் தங்க வைப்பதால், குடலானது பாதிப்படைகிறது.

1.7 மாறுபட்ட வியர்வை வெளியேற்றம்

அசைவ உணவு உண்ணும் விலங்குகள், உடலைக் குளிரச் செய்ய நாக்கைத் தொங்கவிட்டவாறு வேகமாக சுவாசிக்கின்றன. தாவர உணவு உண்ணும் விலங்குகள் மறறும் மனிதர்கள் உடலைக் குளிரச் செய்ய தோலில் உள்ள கோடிக்கணக்கான வியர்வைத் துவாரங்கள் வழியாக வியர்க்கின்றன.

 

அடு்த்து பதிவு(2. அசைவ உணவு நோயற்றதா ?)

இஸ்கான்.

ஹரே க்ருஷ்ணா

 

Copyright 2008 All Rights Reserved By Saran.Jkp