1.அசைவ உணவு உடலுக்கு ஏற்றதா ?
மனிதனின் உடலமைப்பை, அசைவ உணவு உண்ணும் புலி, சிங்கம், பூனை, நாய் போன்ற விலங்குகளின் உடல் அமைப்போடும், தாவர உணவு உண்ணும் பசு, யானை, ஆடு, மாடு போன்ற விலங்குகளின் உடலமைப்போடும் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஆச்சரியப்படும் வகையில் மனிதனின் உடலமைப்பானது தாவர உணவு உண்ணும் விலங்குகளின் உடலமைப்போடு மட்டுமே ஒத்துப் போகிறது.
1.1 பொருந்தாத பார்வை, நகங்கள், முன் பற்கள்
அசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு இரையைப் பிடிக்க வசதியாக இயற்கையாகவே இருளிலும் பரர்க்கும் சக்தியும், இரையைக் கிழித்துண்ண வசதியாக கைகளில் கூறிய நகங்களும், வாயில் கோரைப்பற்களும் உள்ளன. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இத்தகைய உடலமைப்பு இல்லை. அதிலும், மனிதன் மட்டும் செயற்கையாக அரிவாள் , கத்தியுடன் விலங்குகளைக் கொல்கிறான்.
1.2 பொருந்தாத கமடைவாய்ப் பற்கள்
அசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு தட்டையான, கடைவாய் பற்கள் இல்லை. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குக்களுக்கும், மனிதர்களுக்கும் தாவார உணவை அரைத்து உண்ண வசதியாக தட்டையான கடைவாய்ப் பற்கள் உண்டு.
1.3 பொருந்தாத உமிழ்நீர்
அசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு வாயில் சுரக்கும் உமிழ்நீர், ஜீரணிக்கக் கடினமான மாமிசத்தை மென்மைப்படுத்த, இயற்கையாகவே அமில சக்தி அதிகம் உள்ளதாய் உள்ளது. ஆனால் தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீர் கார சக்தி அதிகம் உள்ளதாகவும், நிறைய உமிழ்நீர் சுரந்து ஜீரணத்தை அதிகப்படுத்தும்வண்ணம் உமிழ்நீர் சுரப்பிகள் பெரியதாகவும், டாயலின் என்ற என்சைம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. அதிலும் மனி்தன் மட்டும் செயற்கையாக பிரஷர் குக்கரில் மாமிசத்தை அதிக நேரம் வேக வைத்து மென்னைப்படுத்துகின்றான்
1.4 பொருந்தாத நீர் அருந்தும் பழக்கம்
அசைவ உணவு உண்ணும் விலங்குகள் தங்களுடைய நீண்ட நாக்குகளை நீட்டி நக்கிக் குடிக்கின்றன. ஆனால் தாவார உணவை உண்ணும் விலங்குகளும், மனிதர்களும் உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன.
1.5 பொருந்தாத சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அமைப்பு
அசைவ உணவு உண்ணும் விலங்குகளின் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இரு கழிவு நீக்கும் உறுப்புக்களும் பெரியதாக இருப்பதால் மாமிசத்தினால் ஏற்படும் அதிக கழிவுகளை உடனடியாக வெளியேற்றுகிறது. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இரண்டும் சிறியதாக இருப்பதால் அதிகமான அளவில் உருவாகும் அசைவக்கழிவுகளை வெளியேற்ற முடிவதில்லை. மாறாக, இவை குறைந்த அளவில் உருவாகும் தாவர உணவினால் வரும் கழிவுகளை வெளியேற்றும்வண்ணம் மட்டுமே அமைந்துள்ளன. மாமிச உணவு உண்ணும் மனிதனுக்கு இயற்கை உதவாததால் செயற்கையான மருந்து, மாத்திரைகள் மூலம் இதற்கு வழி காண முயற்சிக்கிறான்.
1.6 பொருந்தாத குடலமைப்பு
அசைவ உணவு உண்ணும் விலங்குகளின்
அசைவ உணவு உண்ணும் விலங்குகளி்ன் குடல் பகுதி உடல் நீளத்தைப் போல் மூன்று மடங்கு மட்டுமே நீளமானதாக இருப்பதால், விரைவில் கெடக் கூடிய அசைவ உணவு விரைவில் வெளியேற்றப்படுகிறது.ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் குடல் பகுதி உடல் நீளத்தைப் போல் பத்து முதல் பனிரெண்டு மடங்கு வரை நீளமானதாக இருப்பதால் விரைவில் கெடாத தாவர உணவுகள் நீண்ட நேரம் தங்கக் கூடிய வகையில் குடலமைப்பு உள்ளது. அதே சமயம் இந்த நீண்ட குடலமைப்பானது, விரைவில் கெடக் கூடிய அசைவ உணவை, விரைவில் வெளியேற்றாமல் நீண்ட நேரம் தங்க வைப்பதால், குடலானது பாதிப்படைகிறது.
1.7 மாறுபட்ட வியர்வை வெளியேற்றம்
அசைவ உணவு உண்ணும் விலங்குகள், உடலைக் குளிரச் செய்ய நாக்கைத் தொங்கவிட்டவாறு வேகமாக சுவாசிக்கின்றன. தாவர உணவு உண்ணும் விலங்குகள் மறறும் மனிதர்கள் உடலைக் குளிரச் செய்ய தோலில் உள்ள கோடிக்கணக்கான வியர்வைத் துவாரங்கள் வழியாக வியர்க்கின்றன.
அடு்த்து பதிவு(2. அசைவ உணவு நோயற்றதா ?)
இஸ்கான்.
ஹரே க்ருஷ்ணா
No comments:
Post a Comment