CLICK THE IMAGE TO READ IN ENGLISH
அத்யாயம் – 5
பாதம் – 12
யுக்த:கர்மபலம் த்யக்த்வா ஷாந்திமாப்நோதி நைஷ்டிகீம்।
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே
யுக்த – பக்தித் தொண்டில் ஈடுபட்டவன்
கர்மபலம் – எல்லா செயல்களின் பலன்கள்
த்யக்த்வா – துறந்து
ஷாந்திம் – பூரண அமைதி
ஆப்னோதி – அடைகிறான்
நைஷ்டிகீம் – அசைவற்ற
அயுக்த – கிருஷ்ண உணர்வில் இல்லாதவன்
காமகாரேண – செயலின் பலனை அனுபவிக்க விரும்புவதால்
பலே – பலன்களில்
நிபத்யதே – பந்தப்படுகிறான்
மொழிப்பெயர்ப்பு
பக்தியில் உறுதியாக உள்ள ஆத்மா, எல்லச் செயல்களின் பலனையும் எனக்கே அர்ப்பணிப்பதால்,பூரண அமைதியை அடைகிறான் ஆனால் தெய்வீகத்துடன் இணையாதவனோ, தனது முயர்சியின் பலனை அனுபவிக்கும் பேராசையால் பந்தப்படுகிறான்./
பொருளுரை
கிருஷ்ண உணர்வில் இருப்பவனுக்கும் உடல் உணர்வில் இருப்பவனுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனி்ல், கிருஷ்ண உணர்வினன் கிருஷ்ணரிடமும்,உடல் உணர்வினன் தனது செயல்களின் பலன்களிலும் பற்றுதல் கொண்டிருப்பதே. கிருஷ்ணரிடம் பற்றுதல்தகொண்டு அவருக்காக செயல்படுபவன், நிச்சயமாக முக்தி அடைந்தவனாவான். அவன் தனது செயல்களின் பலனில் எவ்வித ஏக்கமும் கொள்வதில்லை. இருமையின் உணர்வில் செயல்படுவதே, அதாவது பூரண சக்தியத்தின் ஞானமின்றி செயல்படுவதே, செயலின் பலன்களின் மீதான ஏக்கத்திற்கு காரணம் என்று பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. புருஷோத்தமரான கிருஷ்ணரே பரம பூரண உண்மை. கிருஷ்ண உணர்வில் இருமை கிடையாது. இருப்பவை எல்லாமே கிருஷ்ண சக்தியின் படைப்பே,கிருஷ்ணர் நன்மையின் உருவம். எனவே, கிருஷ்ண உணர்வின் செயல்கள் பூரண தளத்தில் செயல்படுபவை, திவ்யமான அச்செயல்களுக்கு பௌதிக விளைவுகள் கிடையாது. இதனால் ஒருவன் கிருஷ்ண உணர்வில் அமைதி நிறைந்தவனாக உள்ளான். ஆனால் புலனுகர்ச்சிக்கான இலாபக்கணக்கில் மூழ்கியவன் அந்த அமைதியினைப் பெற முடியாது. கிருஷ்ணருக்குப் புறம்பே எதுவும்மில்லை என்பதே அமைதி மற்றும் அச்சமின்மையின் தளம் – இதனை உணர்வதே கிருஷ்ண உணர்வின் இரசியமாகும்
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
No comments:
Post a Comment