CLICK THE IMAGE TO READ IN ENGLISH
அத்யாயம் – 5
பாதம் – 22
யே ஹி ஸம்ஸ்பர்ஷஜா போகா து:கயோநய ஏவ தே।
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:
யே – அவர்கள்
ஹி – நிச்சியமாக
ஸம்ஸ்பர்ஷஜா – ஜடப்புலன்களின் தொடர்பினால்
போகா –இன்பம்
துக – துன்பம்
யோனய – மூலமான
ஏவ – நிச்சியமாக
தே – அவை
ஆதி – முதல்
அந்த – முடிவு
வந்த – உட்பட்டவை
கௌந்தேய – குந்தியின் மகனே
ந – என்றுமில்லை
தேஷீ – அவற்றில்
ரமதே – மகிழ்வடைவது
புத – புத்தியுடையோர்
மொழிபெயர்ப்பு
ஜடப் புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பங்களுக்குக் காரணமாக இருப்பதால், அறிவுடையோன் அதில் பங்கு கொள்வதில்லை. குந்தியின் மகனே, இந்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருப்பதால், அறிவுடையோன் இவற்றினால் மகிழ்ச்சியடைவதில்லை.
பொருளுரை
பௌதி்க புலன்களில் தொடர்பால் உண்டாகும் பௌதிக புலனின்பங்கள், தற்காலிகமானதாகும், ஏனெனில், உடலே தற்காலிகமானதுதானே. முத்தி பெற்ற ஆத்மா நிலையற்ற எதிலும் ஆர்வம் கொள்வதில்லை. திவ்யமான ஆனந்தத்தின் மகிழ்ச்சியினை நன்றாக அறிந்துள்ள முக்தி பெற்ற ஆத்மா, பொய்யான இன்பத்தைத் துய்ப்பதற்கு எவ்வாறு சம்மதிக்க முடியும்? பத்ம புரணத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது.
No comments:
Post a Comment