Saturday, November 5, 2011

சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

veg_saranjkpசைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:
நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.
மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

உடல் எடை:
இறைச்சி உணவை தவிர்ப்பது கொழுப்பு உடலில் சேருவதை குறைக்கும் ஒரு எளிய வழிமுறை. அதற்கு பதிலாக முழு தானிய உணவு,மொச்சை, காய்கறிகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் போன்றவற்றை உண்பது உடம்பிலுள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் குறைக்கிறது.
பற்களுக்கு எளிது:
நமது கடைவாய் பற்கள் இறைச்சி துண்டுகளை கடித்து இழுப்பதை காட்டிலும் தானிய உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை மென்று அரைக்கத்தான் அதிக தோதாக அமைந்துள்ளன. உமிழ் நீருடன்தான் ஜீரண வேலை முதலில் தொடங்குகிறது.இந்த உமிழ் நீர் தாவர வகை கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே ஜீரணிக்க செய்யும் ஆற்றலுடையது.
நோய் தடுப்பு:
மேற்கூறிய சைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், புற்று நோய், சிறுநீரக கோளாறுகள்,ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இவையெல்லாமே சைவ உணவுகளில் மட்டுமே சாத்தியம்.அசைவ உணவு பிரியர்கள் இதனை இழக்கிறார்கள்.

Thursday, November 3, 2011

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-5 பாதம் –12

clip_image001

 

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 5

பாதம் – 12

யுக்த:கர்மபலம் த்யக்த்வா ஷாந்திமாப்நோதி நைஷ்டிகீம்।
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே

யுக்த – பக்தித் தொண்டில் ஈடுபட்டவன்

கர்மபலம் – எல்லா செயல்களின் பலன்கள்

த்யக்த்வா – துறந்து

ஷாந்திம் – பூரண அமைதி

ஆப்னோதி – அடைகிறான்

நைஷ்டிகீம் – அசைவற்ற

அயுக்த – கிருஷ்ண உணர்வில்  இல்லாதவன்

காமகாரேண – செயலின் பலனை அனுபவிக்க விரும்புவதால்

பலே – பலன்களில்

நிபத்யதே – பந்தப்படுகிறான்

மொழிப்பெயர்ப்பு

பக்தியில் உறுதியாக உள்ள ஆத்மா, எல்லச் செயல்களின் பலனையும் எனக்கே அர்ப்பணிப்பதால்,பூரண அமைதியை அடைகிறான் ஆனால் தெய்வீகத்துடன்   இணையாதவனோ, தனது முயர்சியின் பலனை அனுபவிக்கும் பேராசையால் பந்தப்படுகிறான்./

பொருளுரை

கிருஷ்ண உணர்வில் இருப்பவனுக்கும் உடல் உணர்வில் இருப்பவனுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனி்ல், கிருஷ்ண உணர்வினன் கிருஷ்ணரிடமும்,உடல் உணர்வினன் தனது செயல்களின் பலன்களிலும் பற்றுதல் கொண்டிருப்பதே. கிருஷ்ணரிடம் பற்றுதல்தகொண்டு அவருக்காக செயல்படுபவன், நிச்சயமாக முக்தி அடைந்தவனாவான். அவன் தனது செயல்களின் பலனில் எவ்வித ஏக்கமும் கொள்வதில்லை. இருமையின் உணர்வில் செயல்படுவதே, அதாவது பூரண சக்தியத்தின் ஞானமின்றி செயல்படுவதே, செயலின் பலன்களின் மீதான ஏக்கத்திற்கு காரணம் என்று பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. புருஷோத்தமரான கிருஷ்ணரே பரம பூரண உண்மை. கிருஷ்ண உணர்வில் இருமை கிடையாது. இருப்பவை எல்லாமே கிருஷ்ண சக்தியின் படைப்பே,கிருஷ்ணர் நன்மையின் உருவம். எனவே, கிருஷ்ண உணர்வின் செயல்கள்  பூரண தளத்தில் செயல்படுபவை, திவ்யமான அச்செயல்களுக்கு பௌதிக விளைவுகள் கிடையாது. இதனால் ஒருவன் கிருஷ்ண உணர்வில் அமைதி நிறைந்தவனாக உள்ளான். ஆனால் புலனுகர்ச்சிக்கான இலாபக்கணக்கில் மூழ்கியவன் அந்த அமைதியினைப் பெற முடியாது. கிருஷ்ணருக்குப் புறம்பே எதுவும்மில்லை என்பதே அமைதி மற்றும் அச்சமின்மையின் தளம் – இதனை உணர்வதே கிருஷ்ண உணர்வின் இரசியமாகும்

 

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

 

Copyright 2008 All Rights Reserved By Saran.Jkp