CLICK THE IMAGE TO READ IN ENGLISH
அத்யாயம் – 14
பாதம் – 16
கா்மண ஸூக்ருதஸ்யாஹு ஸாத்த்விகம் நிர்மலம் ஃபலம்
ரஜஸஸ்து ஃபலம் து கம் அஜ்ஞானம் தமஸ ஃபலம்
கா்மண :– செயலின் ; ஸுக்ருதஸ்ய – சத்துவ குணத்தில் ; ஆஹீ :– கூறப்படுகின்றது; ஸாத்த்விகம் – சத்துவகுணம் ; நிர்மலம் – தூய்மைப்படுத்தப்பட்ட ; ஃபலம் – விளைவு ;
ரஜோ குணத்தின்;து – ஆனால் ; ஃபலம் - விளைவு; துகம் - துக்கம் ;அஜ்ஞானம் – பொருளற்ற; தமஸ; – தமோ குணத்தின்; ஃபலம் – விளைவு,
மொழிபெயர்ப்பு
சத்துவ குணத்தில் செயற்படுவதால் ஒருவன் தூய்மைப்படுகிறான். ரஜோ குணத்தில் செய்யப்பட்ட செயல்கள் துக்கத்திலும், தாமோ குணத்தில் செய்யப்பட்ட செயல்கள் அறிவிலித்தனத்திலும் விளைவுறுகின்றன.
பொருளுரை
சத்துவ குணத்திலான நற்செயல்களால் ஒருவன் தூய்மைப்படுத்தப்படுகின்றான், எனவே மயக்கத்தினின்றும் விடுபட்டவா்களான முனிவா்கள் மகிழ்சியில் நிலைபெற்றிருக்கின்றனா். அது போலவே ரஜோ குணத்திலான செயல்கள் வெறுமே துக்ககாரமானவை. ஜட சுகத்திற்கான எந்தச் செயலும் நிச்சியமாகத் தோற்கடிக்கப்படும். உதாரணமாக, ஒருவனுக்கு வான் சுரண்டிக் கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பு பெருமளவில் மனித சமூகம் துயரப்பட்டிருக்க வேண்டும். பொருள் வழங்குபவா் பெருமளவு செல்வத்தைச் சோ்க்க மிகக் கடினப்பட்டிருக்க வேண்டும். கட்டிடத்தை உருவாக்க அடிமைப்பட்டிருக்கும் மனிதா்கள் உடலால் மிகவும் பாடுபடவும் வேண்டும். இந்த துக்கங்கள் இருக்கின்றன. ரஜோ குணத்தின் மயக்கத்தின் கீழ் ஆற்றப்படும் எந்தச் செயலிலும் நிச்சயமாகப் பெரும் துக்கம் இருக்கின்றது என்று பகவத்கீதை கூறுகின்றது. மிகச் சிறிய, பெயரளவு மனச் சுகம் வேண்டுமானால் இருக்கலாம் –எனக்கு இந்த வீடு இருக்கின்றது, பணம் இருக்கின்றது--- ஆனால் இது உண்மையில் மகிழ்ச்சியல்ல.
தாமோ குணத்தைப் பொபறுத்தவரை செயலாற்றுபவன் ஞானமற்றவனாயிருக்கிறான். எனவே அவனது செயல்கள் எல்லாம் தற்காலத் துக்கத்தில் விளைவுறுகின்றன. பிறகு அவன் மிருக வாழ்க்கையை நோக்கிச் செல்லுகின்றான்.மயக்கச் சக்தியான மாயையின் தந்திரத்தால் மிருகங்கள் புரிந்து கொள்ளா விடினும் கூட மிருக வாழ்வு மிகவும் துக்ககரமானதே. வாயற்ற பிராணிகளைக் கொல்லுவதும் தாமோகுணத்தின் காரணத்தாலேயே. இந்த மிருகக் கொலையாளிகள் எதிர்காலத்தில் தங்களைக் கொல்லுவதற்தகுத்தக்கதான உடலை மிருகம் பெறப்போகின்றது என்பதை அறியார்கள். இதுவே இயற்கையின் சட்டம். மனித சமூகத்தில் ஒருவன் ஒரு மனிதனைக் கொன்றால் தூக்குண்டு மரணப்படுகிறான். இது தேசத்தின் சட்டம். அறியாமையின் காரணத்தால், பரம புருஷனால் ஆளப்படும் ஒரு முழு தேசம் இருப்பதை மக்கள் காண்பகதில்லை. ஒவ்வொரு உயிர்வாழியும் முழுமுதற் கடவுளின் மைந்தனே,ஒரு சிறு எறும்பு கொல்லப்படுவதைக்கூட அவர் பொருத்துக்கொள்வதில்லை. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். எனவே, நாக்கின் சுவைக்காக மிருகங்களைக் கொல்லுதல் மிகவும் கீழ்த்தரமான அறியாமையாகும். இறைவன் பற்பல அருமையான பொருள்களை வழங்கியிருப்பதால், மிருகங்களைக் கொல்வதற்கான தேவை மனிதர்களுக்கு கிடையாது. இருந்தும், ஒருவன் மாமிச உணவு உண்பதில் ஈடுபட்டால், அவன் அறியாமையில் செயல்படுகிறான் என்பது, மிகவும் இருண்ட எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டுள்ளான் என்பதும் புரி்ந்து கொள்ளப்பட வேண்டும். மிருகவதையின் பற்பல வகைகளில், பசுவைக் கொல்வது மிகவும் கொடூரமானது; ஏனெனில், பாலை வழங்கும் பசு நமக்கு எல்லாவித இன்பத்தையும் கொடுக்கின்றது. பசுவதை என்பது மிகமிக கீழ்த்தரமான அறியாமையாகும். வேத இலக்கியத்தில் ( ரிக் வேதம் 9.46.4), கோ பி ப்ரீணித – மத்ஸரம் என்றும் கூறப்பட்டுள்ளது; அதாவது, பாலால் பூரண திருப்தியடைந்த மனிதன், பசுவைக் கொல்ல விரும்பினால் அது மிகவும் கொடூரமான அறியாமையாகும். வேத இலக்கியத்தில் பின்வருமாறு ஒரு பிரார்த்தனையும் இருக்கின்றது.
நமோ ப்ரஹ்மண்ய-தேவாய கோ – ப்ராஹ்மண்ய-ஹிதாய ச
ஜகத்திதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம:
“எம்பெருமானே, பசுக்களுக்கும் பிராமணர்களுக்கும் நலன்விரும்பி நீரே, மேலும், மொத்த மனித சமுதாயம் மற்றும் உலகத்தின் நலன்விரும்பியும் தாங்களே.”( விஷ்ணு புராணம் 1.19.65) இதன் பொருள் என்னவெனில், பசுக்கள் மற்றும் அந்தணர்கள் ஆன்மீகக் கல்வியின் சின்னம்,பசுக்களோ மிகவும் மதிப்புள்ள உணவின் சின்னம்; இவ்விரு உயிர்வாழிகளும், அதாவது, பிராமணர்களும் பசுக்களும் எல்லாவித பாதுகாப்பும் கொடுக்கப்பட வேண்டியவர்கள் –அதுவே உண்மையான நாகரிக வளர்ச்சி. நவீன மனித சமுதாயத்தில், ஆன்மீக ஞானம் அலட்சியபடுத்தபட்டு பசுவதை ஊக்குவிக்கப்படுகின்றது. இதனால், மனித சமுதாயம் தவறான பாதையில் முன்னேறிக் கொண்டு, தனது சுய அழிவிற்கான வழியைக் கண்டுக்கொண்டு இருக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு நாகரிகம் தங்களது குடிமக்களை அடுத்த பிறவிகளில் மிருகங்களாக ஆகுமாறு வழிநடத்துகின்றதோ, அது நிச்சயமாக மனித நாகரிகம் அல்ல. தற்கால மனித நாகரிகம், ரஜோ குணத்தினாலும் தமோ குணத்தினாலும் அபாயகரமாக வழிதவறி நடத்தப்படுகின்றது என்பது உண்மையே. இது மிகவும் பயங்கரமான காலமாகும்.மனி்த வர்க்கத்தை மாபெரும் அபாயத்திலிருந்து காப்பதற்காக, மிகவும் எளிய வழிமுறையான கிருஷ்ண உணர்வினை எல்லா நாடுகளும் கவனத்துடன் வழங்க முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment