CLICK THE IMAGE TO READ IN ENGLISH
அத்யாயம் – 3
பாதம் -40
இந்த்ரியாணி மனோ புத்திரஸ்யாதிஷ்சடானமுச்யதே ஏதைர்விமோஹயத்யேஷ ஞானமாவ்ருத்ய தேஹினம்
இந்த்ரியாணி – புலன்கள்
மன:– மனம்;
புத்தி: – புத்தி:
அஸ்ய:– காமத்தின்;
அதிஷ்டானம்: – இருப்பிடம்;
உச்யதே: –அழைக்கப்படுகின்றன;
ஏதை: – இவைகளாலெல்லாம்;
விமோஹயதி:– மயக்குகின்றன;
ஏஷ: – இதன்:
ஞானம்: – அறிவு;
ஆவ்ருத்ய:– மூடப்படுகின்றது
தேஹினம்: – உடலுடையோன்:
மொழிபெயர்ப்பு
புலன்கள்,மனம், புத்தி இவையே ஜுவனின் உண்மையறிவை மறைத்து அவனை மயக்கும் இந்தக் காமத்தின் பாசறைகளாகும்.
பொருளுரை
கட்டுண்ட ஆத்மாவின் உடலில் மிக முக்கியமான போர் முனைகளை எதிரி கைப்பற்றியிருக்கிறான். எனவே எதிரியை வெல்ல விரும்பும் ஒருவன் அவனைக் கண்டு கொள்ளும்படி இந்த இடங்களைச் சுட்டிக் காட்டுகிறார் ஸ்ரீ கிருஷ்ணா். புலன்களின் எல்லாச் செயல்களுக்கும் மனமே மையமாகும். எனவே புலன் நுகா்வின் எண்ணங்களெல்லாவற்றின் களஞ்சியம் மனமே. இதனால்தான், மனமும் ,புலன்களும் காமத்தின் பண்டகசாலைகளாகி விடுகின்றன, அடுத்த படியாக புத்திப் பிரிவு இத்தகு காமத்திறன்களின் தலைநகரமாகின்றது. ஆன்மாவிற்கு மிக நெருங்கிய அண்டை வீட்டான் புத்தியே. காமப்புத்தியானது, வீண் அகங்காரத்தை மேற்கொண்டு தன்னை ஜடத்துடன் – இவ்வாறாக மனம், புலன்கள் இவற்றுடன் – ஒன்றித்து நோக்குமாறு ஆத்மாவை வசீகரிக்கிறது. ஜடப் புலன்களைத் துய்ப்பதற்கு அடிமையாகி, இதை உண்மை இன்பமாக எண்ணிக் கொண்டு விடுகிறது ஆத்மா. ஸ்ரீமத் பாகவதத்திலே, ஆத்மாவின் இந்த தப்புணர்வு அழகாக விளக்கப்படுகிறது.
“ யஸ்யாத்மபுத்தி: குணாபே த்ரிதாதுகே
ஸ்வதி: களத்ராதீசு பௌம இஜ்யதீ:
யத்தீர்த்த புத்தி:ஸலிலே ந கா்ஹிசி
ஜனேஸ்வபிக்ஞேஷீ ஸ ஏவ கோகர,:
“மும்மூலங்களாலான உடலை, தானென்றும், இவ்வுடலினால் உற்பத்தியாகும் பிற உடல்களை, உறவென்றும், இவ்வுடல் பிறந்த நிலத்தை வந்தனைக்குரியதாகவும் எண்ணுபவனும், புண்ணியத் தலங்களுக்கு (ஆங்கே உன்னத ஞானமுடையோரைச் சந்திப்பதற் காயன்றி ) வெறுமே குளிப்பதற்காகச் செல்பவனும் காகம் அல்லது கழுதையாகக் கருதப்பட வேண்டியவனே”.
No comments:
Post a Comment