Thursday, October 28, 2010

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-14 பாதம் –16

clip_image001

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 14

பாதம் – 16

கா்மண ஸூக்ருதஸ்யாஹு ஸாத்த்விகம் நிர்மலம் ஃபலம்

ரஜஸஸ்து ஃபலம் து கம் அஜ்ஞானம் தமஸ ஃபலம்

கா்மண :– செயலின்  ;  ஸுக்ருதஸ்ய – சத்துவ குணத்தில் ; ஆஹீ :– கூறப்படுகின்றது;  ஸாத்த்விகம் – சத்துவகுணம் ; நிர்மலம் – தூய்மைப்படுத்தப்பட்ட ; ஃபலம் – விளைவு  ;

ரஜோ குணத்தின்;து – ஆனால் ; ஃபலம்  - விளைவு;  துகம்  - துக்கம் ;அஜ்ஞானம் – பொருளற்ற; தமஸ; – தமோ குணத்தின்; ஃபலம் – விளைவு,

மொழிபெயர்ப்பு

         சத்துவ குணத்தில் செயற்படுவதால் ஒருவன் தூய்மைப்படுகிறான். ரஜோ குணத்தில் செய்யப்பட்ட செயல்கள்  துக்கத்திலும், தாமோ குணத்தில் செய்யப்பட்ட செயல்கள் அறிவிலித்தனத்திலும் விளைவுறுகின்றன.

பொருளுரை

     சத்துவ குணத்திலான நற்செயல்களால் ஒருவன் தூய்மைப்படுத்தப்படுகின்றான், எனவே மயக்கத்தினின்றும் விடுபட்டவா்களான முனிவா்கள் மகிழ்சியில் நிலைபெற்றிருக்கின்றனா். அது போலவே ரஜோ குணத்திலான செயல்கள் வெறுமே துக்ககாரமானவை. ஜட சுகத்திற்கான எந்தச் செயலும் நிச்சியமாகத் தோற்கடிக்கப்படும்.  உதாரணமாக, ஒருவனுக்கு வான் சுரண்டிக் கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பு பெருமளவில் மனித சமூகம் துயரப்பட்டிருக்க வேண்டும். பொருள் வழங்குபவா் பெருமளவு செல்வத்தைச் சோ்க்க மிகக் கடினப்பட்டிருக்க வேண்டும். கட்டிடத்தை உருவாக்க அடிமைப்பட்டிருக்கும் மனிதா்கள் உடலால் மிகவும்  பாடுபடவும் வேண்டும். இந்த துக்கங்கள் இருக்கின்றன.  ரஜோ குணத்தின் மயக்கத்தின் கீழ் ஆற்றப்படும் எந்தச் செயலிலும் நிச்சயமாகப் பெரும் துக்கம் இருக்கின்றது என்று பகவத்கீதை கூறுகின்றது. மிகச் சிறிய, பெயரளவு மனச் சுகம் வேண்டுமானால் இருக்கலாம் –எனக்கு இந்த வீடு இருக்கின்றது, பணம் இருக்கின்றது--- ஆனால்  இது   உண்மையில் மகிழ்ச்சியல்ல.

clip_image001[6]

தாமோ குணத்தைப் பொபறுத்தவரை செயலாற்றுபவன் ஞானமற்றவனாயிருக்கிறான். எனவே அவனது செயல்கள்  எல்லாம் தற்காலத் துக்கத்தில் விளைவுறுகின்றன. பிறகு அவன் மிருக வாழ்க்கையை நோக்கிச் செல்லுகின்றான்.மயக்கச் சக்தியான மாயையின் தந்திரத்தால் மிருகங்கள் புரிந்து கொள்ளா விடினும் கூட மிருக வாழ்வு மிகவும் துக்ககரமானதே. வாயற்ற பிராணிகளைக் கொல்லுவதும் தாமோகுணத்தின் காரணத்தாலேயே. இந்த மிருகக் கொலையாளிகள் எதிர்காலத்தில் தங்களைக் கொல்லுவதற்தகுத்தக்கதான உடலை மிருகம் பெறப்போகின்றது என்பதை அறியார்கள். இதுவே இயற்கையின் சட்டம். மனித சமூகத்தில் ஒருவன் ஒரு மனிதனைக் கொன்றால் தூக்குண்டு மரணப்படுகிறான். இது தேசத்தின் சட்டம். அறியாமையின்  காரணத்தால், பரம புருஷனால் ஆளப்படும் ஒரு முழு தேசம் இருப்பதை மக்கள் காண்பகதில்லை. ஒவ்வொரு உயிர்வாழியும் முழுமுதற் கடவுளின் மைந்தனே,ஒரு சிறு எறும்பு கொல்லப்படுவதைக்கூட அவர் பொருத்துக்கொள்வதில்லை. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். எனவே, நாக்கின் சுவைக்காக மிருகங்களைக் கொல்லுதல் மிகவும்  கீழ்த்தரமான அறியாமையாகும். இறைவன் பற்பல அருமையான பொருள்களை வழங்கியிருப்பதால், மிருகங்களைக் கொல்வதற்கான தேவை மனிதர்களுக்கு கிடையாது. இருந்தும், ஒருவன் மாமிச உணவு உண்பதில் ஈடுபட்டால், அவன் அறியாமையில் செயல்படுகிறான் என்பது, மிகவும் இருண்ட எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டுள்ளான் என்பதும் புரி்ந்து கொள்ளப்பட வேண்டும். மிருகவதையின் பற்பல வகைகளில், பசுவைக் கொல்வது மிகவும் கொடூரமானது; ஏனெனில், பாலை வழங்கும் பசு நமக்கு எல்லாவித இன்பத்தையும் கொடுக்கின்றது. பசுவதை என்பது மிகமிக கீழ்த்தரமான அறியாமையாகும். வேத இலக்கியத்தில் ( ரிக் வேதம் 9.46.4), கோ பி ப்ரீணித – மத்ஸரம் என்றும் கூறப்பட்டுள்ளது; அதாவது, பாலால் பூரண திருப்தியடைந்த மனிதன், பசுவைக் கொல்ல விரும்பினால் அது மிகவும் கொடூரமான அறியாமையாகும். வேத இலக்கியத்தில் பின்வருமாறு ஒரு பிரார்த்தனையும் இருக்கின்றது.

              நமோ ப்ரஹ்மண்ய-தேவாய    கோ – ப்ராஹ்மண்ய-ஹிதாய ச

ஜகத்திதாய க்ருஷ்ணாய  கோவிந்தாய நமோ நம:

sacred-cow_thumb[1]

“எம்பெருமானே, பசுக்களுக்கும் பிராமணர்களுக்கும் நலன்விரும்பி நீரே, மேலும், மொத்த மனித சமுதாயம் மற்றும் உலகத்தின்  நலன்விரும்பியும் தாங்களே.”( விஷ்ணு புராணம் 1.19.65) இதன் பொருள் என்னவெனில், பசுக்கள் மற்றும் அந்தணர்கள் ஆன்மீகக் கல்வியின் சின்னம்,பசுக்களோ மிகவும் மதிப்புள்ள உணவின் சின்னம்; இவ்விரு உயிர்வாழிகளும், அதாவது, பிராமணர்களும் பசுக்களும் எல்லாவித பாதுகாப்பும் கொடுக்கப்பட வேண்டியவர்கள் –அதுவே உண்மையான நாகரிக வளர்ச்சி. நவீன மனித சமுதாயத்தில், ஆன்மீக ஞானம் அலட்சியபடுத்தபட்டு பசுவதை ஊக்குவிக்கப்படுகின்றது. இதனால், மனித சமுதாயம் தவறான பாதையில் முன்னேறிக் கொண்டு, தனது சுய அழிவிற்கான வழியைக் கண்டுக்கொண்டு இருக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு நாகரிகம் தங்களது குடிமக்களை அடுத்த பிறவிகளில்  மிருகங்களாக ஆகுமாறு வழிநடத்துகின்றதோ, அது நிச்சயமாக மனித நாகரிகம் அல்ல. தற்கால மனித நாகரிகம், ரஜோ குணத்தினாலும் தமோ குணத்தினாலும் அபாயகரமாக வழிதவறி நடத்தப்படுகின்றது என்பது உண்மையே. இது மிகவும் பயங்கரமான காலமாகும்.மனி்த வர்க்கத்தை மாபெரும் அபாயத்திலிருந்து காப்பதற்காக, மிகவும் எளிய வழிமுறையான கிருஷ்ண உணர்வினை எல்லா நாடுகளும் கவனத்துடன் வழங்க முன்வர வேண்டும்.

Monday, October 4, 2010

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-3 பாதம் –40

image 

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 3

பாதம் -40

இந்த்ரியாணி மனோ புத்திரஸ்யாதிஷ்சடானமுச்யதே ஏதைர்விமோஹயத்யேஷ ஞானமாவ்ருத்ய தேஹினம்

இந்த்ரியாணி – புலன்கள்

மன:– மனம்; 

புத்தி: – புத்தி: 

அஸ்ய:– காமத்தின்;

அதிஷ்டானம்: – இருப்பிடம்; 

உச்யதே: –அழைக்கப்படுகின்றன;

ஏதை: – இவைகளாலெல்லாம்;

விமோஹயதி:– மயக்குகின்றன;

ஏஷ: – இதன்:

ஞானம்: – அறிவு;

ஆவ்ருத்ய:– மூடப்படுகின்றது

தேஹினம்: – உடலுடையோன்:

மொழிபெயர்ப்பு

புலன்கள்,மனம், புத்தி இவையே ஜுவனின் உண்மையறிவை மறைத்து அவனை மயக்கும் இந்தக் காமத்தின் பாசறைகளாகும்.

பொருளுரை

        கட்டுண்ட ஆத்மாவின் உடலில் மிக முக்கியமான போர் முனைகளை எதிரி கைப்பற்றியிருக்கிறான். எனவே எதிரியை வெல்ல விரும்பும் ஒருவன் அவனைக்  கண்டு கொள்ளும்படி இந்த இடங்களைச் சுட்டிக் காட்டுகிறார் ஸ்ரீ கிருஷ்ணா். புலன்களின் எல்லாச் செயல்களுக்கும் மனமே மையமாகும். எனவே புலன் நுகா்வின் எண்ணங்களெல்லாவற்றின் களஞ்சியம் மனமே. இதனால்தான், மனமும் ,புலன்களும் காமத்தின் பண்டகசாலைகளாகி விடுகின்றன, அடுத்த படியாக புத்திப் பிரிவு இத்தகு காமத்திறன்களின் தலைநகரமாகின்றது. ஆன்மாவிற்கு மிக நெருங்கிய அண்டை வீட்டான் புத்தியே. காமப்புத்தியானது, வீண் அகங்காரத்தை மேற்கொண்டு தன்னை ஜடத்துடன் – இவ்வாறாக மனம், புலன்கள் இவற்றுடன் – ஒன்றித்து நோக்குமாறு ஆத்மாவை வசீகரிக்கிறது. ஜடப் புலன்களைத் துய்ப்பதற்கு அடிமையாகி, இதை உண்மை இன்பமாக எண்ணிக் கொண்டு விடுகிறது ஆத்மா. ஸ்ரீமத் பாகவதத்திலே, ஆத்மாவின் இந்த தப்புணர்வு அழகாக விளக்கப்படுகிறது.

   “ யஸ்யாத்மபுத்தி: குணாபே த்ரிதாதுகே

ஸ்வதி: களத்ராதீசு பௌம இஜ்யதீ:

யத்தீர்த்த புத்தி:ஸலிலே ந கா்ஹிசி

ஜனேஸ்வபிக்ஞேஷீ ஸ ஏவ கோகர,:

     “மும்மூலங்களாலான உடலை, தானென்றும், இவ்வுடலினால் உற்பத்தியாகும் பிற உடல்களை, உறவென்றும், இவ்வுடல் பிறந்த நிலத்தை வந்தனைக்குரியதாகவும் எண்ணுபவனும், புண்ணியத் தலங்களுக்கு (ஆங்கே உன்னத ஞானமுடையோரைச் சந்திப்பதற்  காயன்றி ) வெறுமே குளிப்பதற்காகச் செல்பவனும் காகம் அல்லது கழுதையாகக் கருதப்பட வேண்டியவனே”.

                               

Saturday, October 2, 2010

Indian Temples Abroad !!!


 

clip_image001
Lord Venkateshwara Temple , Birmingham , United Kingdom


clip_image002

Malibu Hindu Temple , Malibu , California , US
clip_image003

Shiva-Vishnu Temple , Livermore , California , US
clip_image004

Lord Vishnu Temple , Angkor , Cambodia
The largest temple of the world, raised during the reign of Suryavarman- II in 12th century, is, in fact, located in Angkor, a major archaeological site of Cambodia . It is dedicated to Lord Vishnu. It is also one of the two temples intact in Angkor , Cambodia . The other is a Buddhist Temple . The largest temple of Lord Vishnu in Angkor is built according to Khmer architecture, original to Cambodia.

clip_image005

Prambanan Shiva Temple , Central Java , Indonesia

clip_image006

Sri Venkateswara Swami Temple of Greater Chicago - Aurora , Illinois , United States
clip_image007

BAPS Shri Swaminarayan Mandir - Toronto , Canada
clip_image008

Sri Siva Vishnu Temple , Washington DC , United States
clip_image009

BAPS Shri Swaminarayan Mandir, London ( Neasden Temple ), United States
clip_image010

Sri Murugan Temple Batu Caves , Penang , Malaysia
clip_image011

Sri Venkateswara Temple , Bridgewater , NJ , US
clip_image012

Mother Temple of Besakih, Bali , Indonesia
clip_image013

Murugan Temple , Sydney , Australia
clip_image014

Venkateswara Swami temple , Riverdale near Atlanta , Georgia , US
clip_image015

Sri Venkateswara Swami Temple , Helensburgh, Sydney , Australia
clip_image016

Velmurugan Gnana Muneeswarar Temple , Rivervale Crescent Sengkang , Singapore
clip_image017

Sri Meenakshi Devasthanam - Pearland , Texas , US
clip_image018

Ekta Mandir, Irving , Texas , US
clip_image019

Sri Venkateshwara Temple - New Jersey , US
clip_image020

Sri Lakshmi Temple - Ashland , MA , US
clip_image021

Sri Venkateswara Swami Temple , Pittsburgh , US
clip_image022

Shiva Vishnu Temple of South Florida Inc, FL, US
clip_image023

Shiva - Vishnu Temple of Melbourne , Melbourne , Australia
clip_image024

Sri Murugan Temple , London , UK
clip_image025

Quad City Hindu Temple , Rock Island , IL , US
clip_image026

Sri Prasanna Venkateswara Swami Temple , Memphis , Tennessee , US
clip_image027

Sri Srinivasa Perumal Temple or Sri Perumal Temple , Little India , Serangoon Road, Singapore

clip_image028
Arulmigu Sri Raja Kaliamman Temple , Johor Baru , Malaysia - The only Hindu Glass Temple abroad.

 


 


 

Copyright 2008 All Rights Reserved By Saran.Jkp