Friday, January 28, 2011

அசைவ உணவு தேவையா? உடலுக்கு ஏற்றதா ?

1.அசைவ உணவு உடலுக்கு ஏற்றதா ?

மனிதனின் உடலமைப்பை, அசைவ உணவு உண்ணும் புலி, சிங்கம், பூனை, நாய் போன்ற விலங்குகளின் உடல் அமைப்போடும், தாவர உணவு உண்ணும் பசு, யானை, ஆடு, மாடு போன்ற விலங்குகளின் உடலமைப்போடும் ஒப்பிட்டுப் பார்க்கையில்  ஆச்சரியப்படும் வகையில் மனிதனின் உடலமைப்பானது தாவர உணவு உண்ணும் விலங்குகளின் உடலமைப்போடு மட்டுமே ஒத்துப் போகிறது.

1.1 பொருந்தாத பார்வை, நகங்கள், முன் பற்கள்

eurasian_eagle_owl

  அசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு இரையைப் பிடிக்க வசதியாக இயற்கையாகவே இருளிலும் பரர்க்கும் சக்தியும், இரையைக் கிழித்துண்ண வசதியாக கைகளில் கூறிய நகங்களும், வாயில் கோரைப்பற்களும் உள்ளன. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இத்தகைய உடலமைப்பு இல்லை. அதிலும், மனிதன் மட்டும் செயற்கையாக அரிவாள் , கத்தியுடன் விலங்குகளைக் கொல்கிறான்.

1.2 பொருந்தாத கமடைவாய்ப் பற்கள்

Untitled-2 copyஅசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு தட்டையான, கடைவாய் பற்கள் இல்லை. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குக்களுக்கும், மனிதர்களுக்கும் தாவார உணவை அரைத்து உண்ண foxவசதியாக தட்டையான கடைவாய்ப் பற்கள் உண்டு.

1.3 பொருந்தாத உமிழ்நீர்

அசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு வாயில் சுரக்கும் உமிழ்நீர், ஜீரணிக்கக் கடினமான மாமிசத்தை மென்மைப்படுத்த, இயற்கையாகவே அமில சக்தி அதிகம் உள்ளதாய் உள்ளது. ஆனால் தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீர் கார சக்தி அதிகம் உள்ளதாகவும், நிறைய உமிழ்நீர் சுரந்து ஜீரணத்தை அதிகப்படுத்தும்வண்ணம் உமிழ்நீர் சுரப்பிகள் பெரியதாகவும், டாயலின் என்ற என்சைம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. அதிலும் மனி்தன் மட்டும் செயற்கையாக பிரஷர் குக்கரில் மாமிசத்தை அதிக நேரம் வேக வைத்து மென்னைப்படுத்துகின்றான்

1.4 பொருந்தாத நீர் அருந்தும் பழக்கம்

அசைவ உணவு உண்ணும் விலங்குகள் தங்கDogளுடைய நீண்ட நாக்குகளை நீட்டி நக்கிக் குடிக்கின்றன. ஆனால் தாவார உணவை உண்ணும் விலங்குகளும், மனிதர்களும் உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன.

1.5 பொருந்தாத சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அமைப்பு

அசைவ உணவு உண்ணும் விலங்குகளின் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இரு கழிவு நீக்கும் உறுப்புக்களும் பெரியதாக இருப்பதால் மாமிசத்தினால் ஏற்படும் அதிக கழிவுகளை உடனடியாக வெளியேற்றுகிறது. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இரண்டும் சிறியதாக இருப்பதால் அதிகமான அளவில் உருவாகும் அசைவக்கழிவுகளை வெளியேற்ற முடிவதில்லை. மாறாக, இவை குறைந்த அளவில் உருவாகும் தாவர உணவினால் வரும் கழிவுகளை வெளியேற்றும்வண்ணம் மட்டுமே அமைந்துள்ளன. மாமிச உணவு உண்ணும் மனிதனுக்கு இயற்கை உதவாததால் செயற்கையான மருந்து, மாத்திரைகள் மூலம் இதற்கு வழி காண முயற்சிக்கிறான்.

1.6 பொருந்தாத குடலமைப்பு

அசைவ உணவு உண்ணும் விலங்குகளின்

அசைவ உணவு உண்ணும் விலங்குகளி்ன் குடல் பகுதி உடல் நீளத்தைப் போல் மூன்று மடங்கு மட்டுமே நீளமானதாக இருப்பதால், விரைவில் கெடக் கூடிய அசைவ உணவு விரைவில் வெளியேற்றப்படுகிறது.ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் குடல் பகுதி உடல் நீளத்தைப் போல் பத்து முதல் பனிரெண்டு மடங்கு வரை நீளமானதாக இருப்பதால் விரைவில் கெடாத தாவர உணவுகள் நீண்ட நேரம் தங்கக் கூடிய வகையில் குடலமைப்பு உள்ளது. அதே சமயம் இந்த நீண்ட குடலமைப்பானது, விரைவில் கெடக் கூடிய அசைவ உணவை, விரைவில் வெளியேற்றாமல் நீண்ட நேரம் தங்க வைப்பதால், குடலானது பாதிப்படைகிறது.

1.7 மாறுபட்ட வியர்வை வெளியேற்றம்

அசைவ உணவு உண்ணும் விலங்குகள், உடலைக் குளிரச் செய்ய நாக்கைத் தொங்கவிட்டவாறு வேகமாக சுவாசிக்கின்றன. தாவர உணவு உண்ணும் விலங்குகள் மறறும் மனிதர்கள் உடலைக் குளிரச் செய்ய தோலில் உள்ள கோடிக்கணக்கான வியர்வைத் துவாரங்கள் வழியாக வியர்க்கின்றன.

 

அடு்த்து பதிவு(2. அசைவ உணவு நோயற்றதா ?)

இஸ்கான்.

ஹரே க்ருஷ்ணா

Tuesday, January 25, 2011

குடியரசுதின வாழ்த்துக்கள்

 

வாழ்க இந்தியா!  வளர்க பாரத மக்கள்!!  பரவட்டும் உலகெல்லாம் பாசமும்
நேசமும்!!!  சூரியனைக் கண்ட பனிபோல ஒழியட்டும் மக்களிடையே விரோத மனப்
பாங்கு!!!!

happy_republic_day1

                                                  அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

Saturday, January 8, 2011

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-5 பாதம் –29

clip_image001

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 5

பாதம் – 29

போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஷ்வரம்

ஸுஹ்ருதம் ஸர்வபூதானாம் ஜ்ஞாத்வா மாம் ஷாந்திம்ருச்சதி

போக்தாரம் -அனுபவிப்பன்

யஜ்ஞ – யாகங்கள்

தபஸாம் - தவங்கள்

ஸர்வலோக – எல்லா லோகங்களும் அங்குள்ள தேவர்களும்

மஹா ஈஷ்வரம் – உயர் அதிகாரி

ஸுஹ்ருதம் – உற்ற நண்பன்

ஸர்வ - எல்லா

பூதானாம் - உயிர்வாழிகள்

ஜ்ஞாத்வா – என்று அறிந்து

மாம் – என்னை பகவான் கிருஷ்ணர்

ஷாந்திம் – உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை,

ருச்சதி – அடைகிறான்

மொழிப்பெயர்ப்பு

நானே,  எல்லா யாகங்களையும் தவங்களையும் இருதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும் தேவர்களையும் கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னை பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத் துயரங்களிலிருந்து விடுபட்டு அமைதி அடைகிறான்.

பொருளுரை

மாயச் சக்தியின் பிடியில் சிக்கியுள்ள அனைத்து கட்டுண்ட ஆத்மாக்களும், பௌதிக  உலகில் அமைதியைத் தேடுகின்றனர். ஆனால் பகவத் கீதையின்  இப்பிரிவில் கூறப்பட்டிருக்கும் அமைதிக்கான வழி என்ன என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அமைதிக்கான மிகச்சிறந்த வழி என்ன இதுவே, மணிதனின் எல்லா செயல்களையும் அனுபவிப்பவர் பகவான் கிருஷ்ணரே, அவரே எல்லா லோகங்களுக்கும் தேவர்களுக்கும் உரிமையாளர் எனபதால்,மனிதர்கள் அவரது திவ்ய சேவைக்காக அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். அவரைவிட உயர்ந்தவர் எவருமில்லை. தேவர்களில் தலைசிறந்தவர்களான சிவபெருமானையும்  பிரம்மதேவரையும்விட, அவரே சிறந்தவர். வேதங்களில் ( ஷ்வேதாஷ்வதர உபநிஷத் 6.7 ) முழுமுதற்க் கடவுள் , தம் ஈஷ்வராணாம் பரமம் மஹேஷ்வரம் என்று வர்ணிக்கப்படுகிறார். மாயைின் மயக்கத்தால், காணும் எல்லாவற்றிற்கும் தானே எஜமானன் என்று ஜீவன்கள் எண்ணினாலும், உண்மையில் அவர்கள் இறைவனின் ஜடச் சக்தியால் அளப்படுகின்றனர். பகவானே ஜட இயற்கையின் எஜமானர், கட்டுண்ட ஆத்மாக்களோ ஜடஇற்கையின்  கடுமையான சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இந்த அப்பட்டமான உண்மையினை உணராதவரை, தனிப்பட்ட முறையிலோ பலபேர் ஒன்று கூடியோ, இவ்வுலகில் அமைதியைக் காண்பது சாத்தியம்மில்லை. இதுவே கிருஷ்ண உணர்வில் அறியப்படுவதாகும். பகவான் கிருஷ்ணரே பரம அதிகாரி, மாபெரும் தேவர்கள் உட்பட  எல்லா ஜீவன்களும் அவரது சேவர்களே.பூரண கிருஷ்ண உணர்வில் மட்டுமே பக்கு வமான அமைதியை அடைய இயலும்.

கரம யோகம் என்ற பெயரால் பொதுவாக அறியப்படும்  இந்த ஐந்தாம் அத்தியாயம் கிருஷ்ண உணர்வின் பயிற்சி விவரமாகும். கர்ம யோகம் எவ்வாறு முக்தியளிக்க முடியும் என்ற கற்பனைக் கேள்விக்கு இங்கு பதில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ண உணர்வில் செயலாற்றுவது  என்றால் பகவான் கிருஷ்ணரே ஆளுநர் என்ற முழு ஞானத்துடன் செயலாற்றுவதாகம். இத்தகைய செயல் திவ்ய ஞானத்திலிருந்து வேறுபட்டதல்ல.நேரடியான கிருஷ்ண உணர்வு பக்தி யோகம் எனப்படும் ஞான யோகம் என்பது பக்தி யோகத்திற்கு இட்டுச் செல்லும் பாதையாகும். பரம உண்மையுடனான ஒருவது உறவைப் பற்றிய முழு ஞானத்துடன் செயல்படுவதே கிருஷ்ண உணர்வாகும். மேலும், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரைப் பற்றிய முழு ஞானமே அந்த உணரவின் பக்குவ நிலையாகும். கடவுளின் மிகச்சிறிய அம்சமான ஆத்மா, அவரது நித்தியத் தொண்டனாவான். ஆத்மா மாயையை ஆட்சி செய்ய விரும்பும்போது, அதனுடன் அவன் தொடர்பு கொள்கிறான். இதுவே அவனது பல்வேறு துயரங்களுக்குக் காரணம். அவன் ஜடத்துடன் தொடர்பு கொண்டுள்ளவரை,அதன் தேவைகளுக்காகச் செலாற்றுதல் அவசியம். இருப்பினும், ஜடத்தின் எல்லைக்குள் இருக்கும்போதிலும், கிருஷ்ண உணர்வானது ஒருவனை ஆன்மீக வாழ்விற்குக் கொண்டு வருகிறது. ஏனெனில், ஜடவுலகில் பயிற்சி செய்யப்படும்போதிலும் ஆன்மீக வாழ்வினை இஃது எழுச்சி பெறச் செய்கின்றது. ஒருவன் எந்த அளவிற்கு இதில் முன்னேறியுள்ளானோ, அந்த அளவிற்கு அவன் ஜடத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்டுள்ளான். கடவுள்   யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை. கிருஷ்ண உணர்வில் அவன் செய்யும் கடமைகளைப் பொறுத்ததே அவனது பலன்கள். அக்கடமைகள் புலன்களை அடக்குவதற்க்கும், கோபம், ஆசை ஆகியவற்றின் தாக்குதலை வெல்வதற்க்கும் உதவியாக அமைகின்றன. மேற்க்கூறிய எழுச்சிகளை அடக்கி, கிருஷ்ண உணர்வில்  நிலையாக நிற்பவன், உண்மையில் ப்ரஹ்ம நிர்வாண எனும் திவ்யாமான நிலையில் உள்ளான். கிருஷ்ண உணர்வை பயிற்சி செய்யும் போது, தானாகவே அஷடாங்க யோக முறையும் பயிற்சி செய்யப்படுகிறது; அடையப்படுகின்றது. அஷ்டாங்க யோக முறையில் யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரணாத்யான, ஸமாதி என்னும் படிப்படியான வழியில் முன்னேற்றம் அடையப்படுகிறது. ஆனால் பக்தித் தொண்டின் பக்குவத்துடன் ஒப்பிடும்போது, இவை ஒரு முன்னுரையைப் போன்றவை. பக்தித் தொண்டு மட்டுமே மனிதனுக்கு அமைதியை நல்கும். பக்தியே வாழ்வின்  மிக உன்னதமான பக்குவநிலையாகும்.

 

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

Saturday, January 1, 2011

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-5 பாதம் –12

clip_image001

 

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 5

பாதம் – 12

யுக்த:கர்மபலம் த்யக்த்வா ஷாந்திமாப்நோதி நைஷ்டிகீம்।
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே

யுக்த – பக்தித் தொண்டில் ஈடுபட்டவன்

கர்மபலம் – எல்லா செயல்களின் பலன்கள்

த்யக்த்வா – துறந்து

ஷாந்திம் – பூரண அமைதி

ஆப்னோதி – அடைகிறான்

நைஷ்டிகீம் – அசைவற்ற

அயுக்த – கிருஷ்ண உணர்வில்  இல்லாதவன்

காமகாரேண – செயலின் பலனை அனுபவிக்க விரும்புவதால்

பலே – பலன்களில்

நிபத்யதே – பந்தப்படுகிறான்

மொழிப்பெயர்ப்பு

பக்தியில் உறுதியாக உள்ள ஆத்மா, எல்லச் செயல்களின் பலனையும் எனக்கே அர்ப்பணிப்பதால்,பூரண அமைதியை அடைகிறான் ஆனால் தெய்வீகத்துடன்   இணையாதவனோ, தனது முயர்சியின் பலனை அனுபவிக்கும் பேராசையால் பந்தப்படுகிறான்./

பொருளுரை

கிருஷ்ண உணர்வில் இருப்பவனுக்கும் உடல் உணர்வில் இருப்பவனுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனி்ல், கிருஷ்ண உணர்வினன் கிருஷ்ணரிடமும்,உடல் உணர்வினன் தனது செயல்களின் பலன்களிலும் பற்றுதல் கொண்டிருப்பதே. கிருஷ்ணரிடம் பற்றுதல்தகொண்டு அவருக்காக செயல்படுபவன், நிச்சயமாக முக்தி அடைந்தவனாவான். அவன் தனது செயல்களின் பலனில் எவ்வித ஏக்கமும் கொள்வதில்லை. இருமையின் உணர்வில் செயல்படுவதே, அதாவது பூரண சக்தியத்தின் ஞானமின்றி செயல்படுவதே, செயலின் பலன்களின் மீதான ஏக்கத்திற்கு காரணம் என்று பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. புருஷோத்தமரான கிருஷ்ணரே பரம பூரண உண்மை. கிருஷ்ண உணர்வில் இருமை கிடையாது. இருப்பவை எல்லாமே கிருஷ்ண சக்தியின் படைப்பே,கிருஷ்ணர் நன்மையின் உருவம். எனவே, கிருஷ்ண உணர்வின் செயல்கள்  பூரண தளத்தில் செயல்படுபவை, திவ்யமான அச்செயல்களுக்கு பௌதிக விளைவுகள் கிடையாது. இதனால் ஒருவன் கிருஷ்ண உணர்வில் அமைதி நிறைந்தவனாக உள்ளான். ஆனால் புலனுகர்ச்சிக்கான இலாபக்கணக்கில் மூழ்கியவன் அந்த அமைதியினைப் பெற முடியாது. கிருஷ்ணருக்குப் புறம்பே எதுவும்மில்லை என்பதே அமைதி மற்றும் அச்சமின்மையின் தளம் – இதனை உணர்வதே கிருஷ்ண உணர்வின் இரசியமாகும்

 

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

 

Copyright 2008 All Rights Reserved By Saran.Jkp